ADVERTISEMENT

நடிகர் ரஜினிக்கு துணிச்சல் இருக்கிறதா? விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு அதிரடி கேள்வி! 

10:21 AM Feb 15, 2020 | Anonymous (not verified)

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இதில் குழந்தைகள், பெண்கள் என பலர் கலந்துகொண்டனர். அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தைக் கைவிடும் படி எச்சரித்தனர். போராட்டக்காரர்கள் இதற்கு செவிகொடுக்கவில்லை. இதையடுத்து போலீஸ் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 120க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதை கண்டித்து வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவியது. காவல்துறையினர் நடத்திய தடியடியில் ஒரு முதியர் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தமிழ்நாடு காவல்துறை மறுத்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் அமைப்பு தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் வன்னியரசு கருத்து தெரிவித்துள்ளார். அதில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி இன்று வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்துக்குள் புகுந்து தடியடி நடத்தியுள்ளது. சனநாயகப்பூர்வமாக நடந்த போராட்டத்தை சீர்குலைத்து அச்சுறுத்தும் போக்கை காவல்துறை கைவிட வேண்டும் என்றும், குடியுரிமை பறிப்பு சட்டத்துக்கு எதிராக போராடிய மக்கள் மீது தடியடி, பலர்படுகாயம் அதிமுக அரசா? RSS அரசா? என்றும், இசுலாமியருக்கு பாதிப்பென்றால் சும்மா இருக்கமாட்டேன் என்று சொன்ன ரஜினிகாந்த் அவர்களே, நேற்றைய இரவு இசுலாமியர் மீது நடத்திய போலீஸ் தடியடி உங்களுக்குத்தெரியாதா? போலீசை கண்டிக்க உங்களுக்கு துணிச்சல் இருக்கிறதா? என்றும் கருத்து கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT