Advertisment

தலைவர்களை அவமதிக்கும் மத அமைப்புகளுக்கு எதிராக விசிக ஆர்ப்பாட்டம் ( படங்கள்)

Advertisment

தலைவர்களை தொடர்ந்து அவமதித்து வரும் மத அமைப்புகளைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

சென்னை வள்ளுவர் கோட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில்திருவள்ளுவர், பெரியாரைதொடர்ந்து அம்பேத்கருக்கும் காவி ஆடை, திருநீறுமற்றும் குங்குமம் இட்டு அவமதிக்கும் சனாதன சங்பரிவார் அமைப்புகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது. தொடர்ந்து தலைவர்களை அவமதிக்கும் கும்பலை கைது செய்யவும், வரலாற்றை திரிக்கமுயற்சி செய்யும் மத அமைப்புகளைத்தடை செய்யவும் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டமானது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஏராளமான கட்சி தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

thol.thirumavalavan viduthalai siruthai katchi
இதையும் படியுங்கள்
Subscribe