Advertisment

“வாரிசு என்றாலே பிரச்சனை தான்” - சீமான்

publive-image

வாரிசு என்றாலே படமாக இருந்தாலும் பதவியாக இருந்தாலும் பிரச்சனை தான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Advertisment

புதுச்சேரியில் நடந்த மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். இதன் பின் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisment

அப்போது பேசிய அவர், “பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகப்போகிறது. நாட்டிற்கு அவர்கள் செய்த ஒரு நல்லதைச் சொல்லுங்கள். அதானி இரண்டரைலட்சம் கடன் வாங்கியவர். அவரை உலகின் இரண்டாவதுபணக்காரர் என்றால் கோபம் தான் வரும். இதைத்தவிர என்ன செய்தீர்கள்.

கமல்ஹாசன் 65 வருடங்கள் நடித்துள்ளார். அவர் உலகப் புகழ் பெற்ற திரைக்கலைஞன். நான்அவரது திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவன். அரசியலில் அவர் எடுப்பது தான் முடிவு. காங்கிரஸுடன் கூட்டணி வைத்து பாராளுமன்றத்தேர்தலைச் சந்திக்கலாம் என அவர் நினைக்கலாம். அதில் பெரிய தவறு இல்லையே.

காங்கிரஸ் உடன் கூட்டணியில் திமுக உள்ளது. ஆனால் அனைத்துத்திட்டங்களுக்கும் மோடியை அழைத்து வருகிறது. வாரிசு என்றாலே படமாக இருந்தாலும் பதவியாக இருந்தாலும் பிரச்சனைதான்” எனக் கூறியுள்ளார்.

vijay seeman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe