/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4167.jpg)
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,“வைத்திலிங்கம் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது, டாப் 10 நிறுவனங்களில் ஒன்றிடம் லஞ்சம் வாங்கியுள்ளார். அந்த நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டிய நிலையில், ஜெயலலிதாவுக்கு தெரியாமல் அந்த ஒப்புதலை நிறுத்தி வைத்துவிட்டு ரூ. 18 கோடியை லஞ்சமாக பெற்றுள்ளார். அதன்பின் ரூ. 18 கோடி வாங்கிய பிறகே அந்நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அந்நிறுவனம் ஒரு லிமிட்டெட் நிறுவனம் அதனால் நேரடியாக பணம் கொடுக்க முடியாமல் அமெரிக்காவில் இருக்கும் அதன் தலைமையகத்திடம் கேட்டு பணம் வழங்கியுள்ளனர். அதனை அவர்கள் மின் அஞ்சல் வழியாக கேட்டுள்ளனர். தற்போது அந்த மின் அஞ்சல் கிடைத்துள்ளது. அது வெளியே வந்து அதில் ஒரு அதிகாரியும் சிக்கியுள்ளார். நிச்சயமாக அந்த அதிகாரி வைத்திலிங்கத்தை காட்டி கொடுப்பார்” என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)