Vaithilingam

சட்டமன்றதேர்தலுக்காகவும், கட்சியில் அதிருப்தியில் இருப்பவர்களை சரி செய்யவும் கட்சிப் பதவிகளில் சிலரை மாற்ற அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்துக்கு டெல்டா பகுதிகள் முழுவதையும் கவனித்துக் கொள்ளும் வகையில் பதவி வழங்க இருப்பதாக அதிமுக மேலிடத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisment

மேலும் கட்சியில் சில மாவட்டசெயலாளர்களும் மாற்றப்பட உள்ளார்களாம். விரைவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இதுகுறித்து கட்சி அலுவலகத்தில் கலந்தாலோசித்து, அதன் அடிப்படையில்முடிவு எடுக்கப்பட்டு, அறிவிப்பு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisment

மத்திய அமைச்சரவையில்தான் இடம்பெற உதவ வேண்டும் என்று இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். ஆகியோரிடம் கேட்டுக்கொண்டிருந்தார் ராஜ்யசபா உறுப்பினரான வைத்திலிங்கம். இதனால் கட்சியின் தலைமை மீது கோபத்தில் இருந்த வைத்திலிங்கத்தை சரி செய்ய வேண்டும், டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் டெல்டா பகுதிகளை அவரது கைவசம் கொடுக்க முடிவெடுத்துள்ளார்களாம்.

-மகேஷ்