Advertisment

பெரியார் சிலையில் கைவைத்தால்..... எச்.ராஜாவுக்கு வைரமுத்து எச்சரிக்கை

vairamuthu

Advertisment

திரிபுரா மாநிலம் பெலோனியா பகுதியில் உள்ள கல்லூரி சதுக்கப் பகுதியில் சி.பி.எம். ஆட்சியில் வைக்கப்பட்ட ரஷ்யப் புரட்சியாளர் விளாதிமிர் லெனினின் சிலையை பாஜகவினர் இடித்துத் தள்ளினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று காலை பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தன் முகநூல் பதிவில், லெனின் யார் அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத்தின்கும் இந்தியாவிற்கும என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபூராவில். இன்று திரிபூராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை. இவ்வாறு அவர் முகநூல் பதிவில் கருத்து தெரிவித்திருந்தார்.

எச்.ராஜாவின் இந்த பதிவுக்கு அனைத்து கட்சியினர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’பெரியார் சிலை உடைக்கப்பட வேண்டும் என்ற எண்ணமே உடைக்கப்பட வேண்டும். பெரியார் சிலையில் கைவைத்தால் தேனீக்கூட்டில் கைவைத்த கதையாகிவிடும்’’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

if he hands in Periyar idol Vairamuthu warns H. Raja
இதையும் படியுங்கள்
Subscribe