Vaiko spoke about the cabinet change

Advertisment

தனியார் திருமண மண்டபத்தை திறந்து வைப்பதற்காக மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் திருச்சிக்கு வந்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக தனியார் நட்சத்திர ஓட்டலில் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மதிமுக அமைப்பு தேர்தல் 80% முடிந்துவிட்டது. மதிமுக ஊக்கம் கொண்டு வளர்ந்து வருகிறது. பல்வேறு புதிய அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மதிமுகவில் பொதுக்குழு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவிஇல்லாத அதிகாரத்தை தானே எடுத்து கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட மாடல் ஆட்சியை எதிர்த்து செயல்படுகிறார். இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக நம் தமிழகம் உள்ளது. எல்லோரும் பாராட்டும் நேரத்தில் ஆளுநர் உளறிக்கொண்டு உள்ளார். ஆளுநரின் எந்த வார்த்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்துத்துவ ஏஜெண்டாக அவர் செயல்பட்டால் அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்லலாம். இது போன்ற நிலை இதுவரை தமிழகத்தில் ஏற்பட்டதே இல்லை. இந்த தாந்தோன்றிபோக்கு சரியல்ல. ஆளுநர் அவரது பதவியில் நீடிப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல.

Advertisment

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்தில் கூட தமிழக முதலமைச்சர் எல்லா விதமான யோசனையும் செய்து மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். எது நல்லதோ அதை அவர் செய்து வருகிறார். திராவிட மாடல் ஆட்சியை ஸ்டாலின் நடத்தி வருகிறார். சாதனை படைத்துள்ள மாணவி நந்தினியை போல எல்லா மாணவர்களும் உருவாக வேண்டும்” என்றார்.