Advertisment

வெறிபிடிச்ச ஓநாய்களை வெளிய விட்டுருக்கீங்க... வைகோ ஆவேசம்

Vaiko protest

சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விடுதலைக்கு ஒப்புதல் வழங்க கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைப்பெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், திமுகவைச் சேர்ந்த டிகேஎஸ் இளங்கோவன், மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

Advertisment

ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ,

''3 அப்பாவி மாணவிகளை எரித்துக் கொன்றவர்களை விடுதலை செய்யும் ஆளுநர், எந்த தவறும் செய்யாத 7 அப்பாவிகளை விடுதலை செய்ய மறுப்பது ஏன்? 3 பேர் கொல்லப்பட்டதற்கும், அதிமுகவினருக்கும் முன்விரோதம் இல்லை. கூட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பேருந்து தீப்பிடித்தது என்கிறார்கள்.

Advertisment

எந்த காரணமும் இல்லாமல், முன்விரோதமும் இல்லாமல் ஒருவன் கொலை செய்தால், அவன் கொடிய வெறிப்பிடித்த ஒநாயை விட கொடியவன். இந்த மூன்று பேரும் கொடிய வெறிப்பிடித்த ஒநாயை விட மோசமானவர்கள். அவர்கள் 3 பேரையும் விடுதலை செய்துவிட்டு, முன்விரோதம் இல்லை, கூட்ட கலகம் என கூறியிருக்கிறார்'' என ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தார்.

7 people release Issue governor Panwarilal Purohit protest vaiko
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe