Advertisment

GET OUT TAMILNADU GOVERNOR PANWARILAL - வைகோ தலைமையில் முழக்கம் (படங்கள்)

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படாமல் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக் கோரி இன்று கவர்னர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., மாவட்டச் செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மே-17 இயக்க நிர்வாகிகள், இயக்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisment

போராட்டத்தில் மத்திய - மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். விடுதலை செய், விடுதலை செய், 7 பேர்களை விடுதலை செய் உள்ளிட்ட பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினார்கள். வைகோ தனது கையில் GET OUT TAMILNADU GOVERNOR PANWARILAL என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகையை கையில் வைத்திருந்தார். GET OUT TAMILNADU GOVERNOR PANWARILAL என்ற முழக்கங்களும் எழுப்பப்பட்டது.

Advertisment

7 person governor issue Panwarilal Purohit protest release vaiko
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe