style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் உயர்நிலை மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். வண்ணாரபேட்டையில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டன தீர்மானம், ஹைட்ரோகார்பன் தொடர்பான மத்திய அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரத்து செய்யாமல், வேளாண் பாதுகாப்பு மண்டலம் குறித்த முதல்வர் அறிவித்திருப்பது மகா மோசடி என்பன உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.