Advertisment

இன்று (15.09.2021) காலை பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக தலைமைச் செயலகமான தாயகத்தில், வைகோ எம்.பி. அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, கழகத்தின் கொடியை ஏற்றினார். கழகத்தின் மாநில, மாவட்ட, பகுதி, வட்ட, கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட கழக தோழர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர். மேலும் நாளை (15.09.2021) மாலை 3:00 மணிக்கு நடைபெறும் அண்ணா பிறந்தநாள் விழா காணொளி மாநாடு நிகழ்ச்சி தாயகத்தில் பெரிய அளவிலான வண்ணத்திரை மூலமாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.