thirumavalavan - vaiko

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவரது சென்னை அண்ணாநகர் இல்லத்தில் சந்திக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். இந்த சந்திப்பு பகல் 12 மணி அளவில் நடைபெற உள்ளது.

Advertisment

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வைகோ பேட்டி அளித்திருந்தார். இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்த கருத்துக்கள் வருத்தமளிக்கிறது என்று மதிமுகவினர் தெரிவித்தனர். தொண்டர்கள் மத்தியில் மனகசப்பு இருந்து வருவதால் அதனை சரி செய்ய திருமாவளவன், வைகோவைதொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதுடன், சந்திக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அப்போது, அட விடுப்பா நமக்குள்ள என்ன? தொடர்ந்து வெளியூர் பயணம், ஸ்டெர்லைட் வழக்குக்காக டெல்லி பயணம் என இருக்கிறேன். செவ்வாய்க்கிழமை 12 மணிக்கு நம்ம சென்னை வீட்ல சந்திக்கலாம் என்று வைகோ கூறியுள்ளார்.

Advertisment

இதையடுத்து வைகோவை சந்திக்கிறார் திருமாவளவன். இந்த சந்திப்புக்கு பின், இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிப்பார்கள் என தெரிவித்துள்ளனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.