Advertisment

பிள்ளைகளே பெற்றோரை உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போடச்சொல்கிறார்கள்! - வைகோ பேச்சு

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வேலுச்சாமியையும். நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளரான சொவுந்திர பாண்டியனையும் ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்து பல்வேறு பகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

Advertisment

vaiko

இறுதியாக திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோவுடன் துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமியும் கலந்து கொண்டு திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டி போடும் வேலுச்சாமிக்கு பொதுக்கூட்டத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்

.

அதன் பின் தேசிய கழக துணை பொதுச்செயலாளர்ஐ. பெரியசாமியோ, “இன்னும் 48 மணி நேரத்திற்கு கடுமையாக உழைத்தீர்கள் என்றால் மத்தியில் ராகுல் காந்தியையும் மாநிலத்தில் ஸ்டாலினையும் ஆட்சியில் அமரவைத்துவிடலாம்.திமுகவிற்காக இரவு பகல் பாராமல் எந்த ஒரு எதிர்பார்ப்பையும், சலுகையும் எதிர்பார்க்காமல் அண்ணன் வைகோ உழைத்து வருகிறார். அதற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

.

Advertisment

இறுதியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும் போது, “பாராளுமன்றத் தேர்தல் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவின் சர்வாதிகார ஆட்சி வீழ்த்தப்படும் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் பிரதமர் மோடி பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ளும் போதெல்லாம் முப்படைகளை காட்டி வாக்கு சேகரிக்கிறார் அவர்கள் சிந்திய ரத்தம் இந்தியாவில் வாழும் 150 கோடி மக்களுக்கு சொந்தம். அவர்கள் சிந்திய ரத்தம் நாட்டுக்கானது அதை எந்த அரசியல் கட்சிகளும் சொந்தம் கொண்டாட முடியாது மக்களை காக்க ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை வைத்து மத்திய அரசு ஓட்டு கேட்பது வெட்கமான விஷயம். இப்படிப்பட்ட மோடியின் கூட்டத்தை தூக்கி எறிய வேண்டும் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்தபோது பிரான்ஸ் நாட்டில் 126 ரபேல் போர் விமானங்கள் ரூ. 526 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதிலும் 18 விமானங்களை மட்டும் பிரான்ஸ் நாட்டில் வாங்கிக்கொண்டு மீதியுள்ள விமானங்களை பிரான்ஸ் நாட்டு தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே தயாரிக்க உள்ளதாக தான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், அடுத்து ஆட்சியை பிடித்த பிரதமர் மோடி அந்த ஒப்பந்தத்தை கிழித்து எறிந்துவிட்டு போர் விமானம் தயாரிப்பது குறித்து எந்த வித அனுபவமும் இல்லாத அனில் அம்பானியை காஞ்சிக்கு அழைத்துச் சென்று ரூ. 1670 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் அவர்கள் செய்த ஊழலை ஒரு ஆங்கில நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான ஆட்சி ஊழல் நிறைந்த கட்சியாக உள்ளது. அதனால் அக்கா தங்கை மார்களே வரக்கூடிய தேர்தலில் சிந்தித்து வாக்களியுங்கள். உங்கள் நகைகளான ஒருபவுன், இரண்டு பவுன்,மூன்றுபவுன் என வங்கிகளில் அடகு வைத்து கடன் வாங்கி இருப்பீர்கள், அந்த கடனை எல்லாம் ஸ்டாலின் ரத்து செய்வதாக உறுதி அளித்திருக்கிறார்.

அதுபோல் மாதம் மாதம் ஆறாயிரம் ரூபாய் வீதம் வருடத்திற்கு எழுபத்தி இரண்டாயிரம் ரூபாய் உங்கள் வீடு தேடி கொடுக்க இருக்கிறார்கள் அதனால், மக்கள் சிந்தித்து வாக்களியுங்கள். தற்பொழுது வீட்டில் இருக்கும் பிள்ளைகள் எல்லாம் தங்கள் பெற்றோர்களை உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு வலியுறுத்தி வருகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்றால் நான் படித்து டாக்டர் ஆக வேண்டும் என்றால் நீட் தேர்வ் ரத்து, கல்வி கடன் ரத்து செய்ய கூடிய உதய

சூரியனுக்கு தான் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். அதனால் வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளரான வேலுச்சாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும்” என்று கூறினார்.

இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராகவன், திமுக நகரச் செயலாளர் ராஜப்பா, முன்னாள் நகர செயலாளர் பசீர் அகமது மற்றும் கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்களுடன் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

loksabha election2019 mdmk vaiko
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe