Advertisment

மோடியே அவருக்கு சாவுக்குழியை வெட்டிக்கொள்கிறார்: நாராயணசாமி பேட்டி

v. narayanasamy

காங்கிரஸ் ஆட்சியில் 140 டாலராக கச்சா எண்ணெய் விலை இருந்தபோது பெட்ரோல் ரூ.65ஆகவும், டீசல் ரூ.55 என விற்பனை இருந்த நிலையில், தற்போது 65 டாலராக கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், பெட்ரோல் ரூ.77, டீசல் ரூ.68 என உயர்ந்திருப்பதாக புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டினார். மக்களின் பணமான 2 லட்சம் கோடி ரூபாயை மோடி கொள்ளை அடித்து, அரசுக்கு எடுத்துக்கொள்வதாகவும் சாடினார்.

Advertisment

கோவை விமான நிலையத்தில் மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பெட்ரோல், டீசல் விலையால் மக்கள் கொதித்து போய்யுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மோடியே அவருக்கு சாவுக்குழியை வெட்டிக்கொள்கிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 9% என்கிற வளர்ச்சி 6 சதவிகிதமாக தற்போது குறைந்துள்ளது.

Advertisment

ஊழலை ஒழிப்போம் என்று சொல்லிவிட்டு ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்ற எடியூரப்பாவிற்கு கர்நாடக தேர்தலில் பாஜக வாய்ப்பளித்துள்ளது. பாஜகவின் இரட்டை வேடத்தையும், மோடியின் முகத்திரையையும் கிழிப்பது போன்று கர்நாடக தேர்தல் முடிவுகள் வரும்.

காவிரி விவகாரத்தில் கர்நாடகவில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள போதிலும், புதுச்சேரி மக்களுக்காக எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தோம். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். காவிரி விவகாரத்தில் தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை பிரதமர் வஞ்சிக்கிறார்.

ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெற வேண்டும் என 2 ஆண்டுகளாக நாங்களும் கேட்டு வருகிறோம், புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக ஆளுநர் கிரண்பேடி எதுவும் செய்யாத நிலையிலும், முதல்வரான பிறகு நிர்வாகம், கல்வி, சட்டம் ஒழுங்கு போன்ற பல்வேறு துறைகளில் புதுச்சேரி முதன்மையான இடத்தை ஆளுனரின் தொல்லை மீறி பெற்று வருகிறது.

அதே நிலை தான் தமிழகத்திலும் உள்ளது. பாஜக காலூன்ற முடியாது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஆளுநரை வைத்து ஆதிக்க செலுத்த பிரதமர் நினைக்கிறார். 6 மாதங்களில் நரேந்திர மோடி காணாமல் போய்விடுவார். சமையல் எரிவாயு, மண்ணெண்ணை ஆகியவற்றுக்கு காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த மானியங்களை பாஜக ரத்து செய்து நாட்டை குட்டிச்சுவராக்கும் பணியை மோடி செய்து வருவதாக சாடினார்.

narandra modi covai interview v. narayanasamy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe