அதிமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

Advertisment

 aiadmk V. Maitreyan

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்சென்னையில் போட்டியிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதில் எனக்கு வருத்தம் இருக்கிறது என்றார்.

நேற்று மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் முடியும்போது நாடாளுமன்ற மாநிலங்களவையில் கண்ணீருடன் உருக்கமாக பேசினார். இந்த நிலையில் சென்னையில் இன்று பேசிய மைத்ரேயன், மீண்டும் எம்.பி. பதவி கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.