Advertisment

உசிலம்பட்டியில் உல்டா பாலிடிக்ஸ் - அதிர்ச்சியில் அதிமுக - திமுக

மதுரை தெற்கு மாவட்ட அமமுக செயலாளராக இருப்பவர் மகேந்திரன். இவர் உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ. கடந்த சில நாட்களுக்கு முன்பு அமமுகவின் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். இவரை திமுகவின் உசிலம்பட்டி ஒன்றிய செயலாளரும், உசிலம்பட்டி ஒன்றிய பெருந்தலைவருமான சுதந்தரம் நேரில் சென்று சுவீட் கொடுத்து, சால்வை அணிவித்து வாழ்த்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

அடுத்து திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் சோலை ரவியும் நேரில் சென்று சால்வை அனுவித்து வாழ்த்தியது திமுக உடன் பிறப்புகளிடையே முனுமுனுப்பு தொடங்கி உள்ளது. என்னவென்றால் இன்னும் சில மாதங்களில் பொது தேர்தல் வர இருக்கிறது. எப்படியும் அமமுகவின் மகேந்திரன் எம்.எல்.ஏ வேட்பாளராக நிற்க போகிறார். அப்படி இருக்கிறப்ப திமுக வேட்பாளருக்கு இவர்கள் எப்படி உண்மையாக வேலை செய்வார்கள். இப்பவே உள்ளடி வேலையை ஆரம்பித்து விட்டார்களோ என்று எண்ண தோன்றுகிறது உ.பி-க்கள் ஆதங்கபடுவது தெரிகிறது. திமுகவைச் சேர்ந்தவர்கள் அமமுக மகேந்திரனை சந்தித்தது அதிமுகவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

admk ammk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe