Advertisment

“நான் இருக்கும் வரை ஒரு செங்கல் கூட நீங்கள் கொண்டுவர முடியாது” - சீமான்

publive-image

திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியத்தில் 9 கிராமங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து விமானநிலையத்திற்காக விவசாய நிலத்தினை எடுத்துக் கொள்ளுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிவசாயிகள் திரள் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisment

அப்போது பேசிய அவர், “அனைத்து விவசாய நிலங்களையும் தொழிற்சாலை, விமான நிலையம் என பறித்துக் கொண்டால் சாப்பாட்டிற்கு என்ன செய்வீர்கள். உலக நாடுகளின் பட்டினிக் குறியீட்டு வரிசையில் உள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கை 127. அதில் 107 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியா பஞ்சப் பிரதேசமாக மாறிக்கொண்டு வருகிறது. பிஞ்சுக் குழந்தைகளைப் பட்டினி போட்டுவிட்டு என்ன வளர்ச்சியைக் கட்டமைக்கிறீர்கள். விளைச்சலுக்குப் பயன்படாத இடங்களில் தொழிற்சாலை கட்டுங்கள். நாடு எங்கும் விவசாய மக்களுக்கு இது தான் நடக்கிறது. நான் இருக்கும் வரை ஒரு செங்கல்கூட நீங்கள் கொண்டு வர முடியாது. ஓசூரில் டாடாவுக்கு நிலத்தை கொடுத்தோம். 800 பெண்களை ஜார்கண்டில் இருந்து கொண்டு வந்து வேலை கொடுக்கிறார்கள். நாங்கள் நிலத்தை கொடுத்து விட்டு என்ன செய்வது.

Advertisment

நான் வேலை தருகிறேன். நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள். என் காற்று, நிலம், நீர் எதுவும் நஞ்சாகாது. படித்தவர், படிக்காதவர் அனைவருக்கும் அரசு வேலை நான் கொடுக்கிறேன். திட்டம் சொல்லுகிறேன். தொழிற்சாலை என்ற பெயரில் முதலாளிகளுக்கு நிலங்களைப் பறித்துக் கொடுத்தீர்கள்” எனக் கூறினார்.

Tamilnadu seeman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe