Advertisment

மத்திய அமைச்சர் பதவி!!! - எடப்பாடியுடன் ரவீந்திரநாத் சந்திப்பு!

edappadi palanisamy ravindranath

அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற பிரச்சனை கடந்த 7ஆம் தேதி முடிவுக்கு வந்தது. முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியை நியமித்த பிறகு, எடப்பாடி பழனிசாமி அன்று மாலையேஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு நேரடியாகச் சென்று சந்தித்தார்.

Advertisment

அப்போது எடப்பாடி பழனிசாமியை வரவேற்ற ரவீந்திரநாத், அவரிடம் ஆசி பெற்றார். அப்போதே ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்துவிடும் என்று அ.தி.மு.க சீனியர்கள் பேசிக்கொண்டனர்.

Advertisment

குறைந்தபட்சம் ரவீந்திரநாத் ராஜாங்க அந்தஸ்துள்ள (Minister of state) அமைச்சராக வாய்ப்பிருக்கிறது. இதற்கு நோ அப்ஜக்ஷன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துவிட்டார். ஓ.பி.எஸ்மகன் அமைச்சராவது பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியை உறுதிப்படுத்திவிடும் என்கிறார்கள், அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள். இந்தநிலையில், அ.தி.மு.கமுதலமைச்சர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமியை, ரவீந்திரநாத் சந்தித்துப் பேசியுள்ளார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பில் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

admk Edappadi Palanisamy ravindranath
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe