Advertisment

நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசு; அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தி.மு.க.!

The Union Govt did not release funds DMK issued a dramatic announcement

Advertisment

100 நாள் வேலை உறுதி திட்டத்தின் (MGNREGA) மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் தலா இரண்டு இடங்களில் மார்ச் 29ஆம் தேதி ( 29.3.2025 - சனிக்கிழமை) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சரும், திமுகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், 09-03-2025 அன்று காலை, சென்னை, அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் நடைபெற்ற ‘தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில்’ திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போது, ‘தமிழ்நாடு மாநில நலன் குறித்து கேள்விகள் எழுப்பி, அதற்குரிய பதிலை ஒன்றிய அரசிடம் பெற வேண்டும்’ என்றும்; அத்துடன் ‘ஒன்றிய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட(MGNREGA) நிதியை வழங்காதது’ குறித்து கேள்வி எழுப்பிட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

இந்த அறிவுரைக்கிணங்க, ‘ஒன்றிய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட(MGNREGA) நிதியை வழங்காதது குறித்து 25.03.2025 அன்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு எவ்வித பதிலையும் தராமலும் - தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) நிதியை வழங்காமலும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் 29.3.2025 (சனிக்கிழமை) அன்று காலை அனைத்து திமுக ஒன்றியங்களிலும் தலா இரண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் 100 நாள் வேலைவாய்ப்பால் பயன்பெறுவோரைத் திரட்டி ‘மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்’ நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

MGNREGA
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe