Advertisment

'படையப்பா டயலாக் போலத்தான் ஒன்றிய அரசின் திட்டங்களும்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு 

'The Union government's plans are like the Padayappa movie dialogue' - Chief Minister M.K. Stalin's speech

குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க சேலம் மாவட்டம் மேட்டூருக்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 92 ஆவது ஆண்டாக மேட்டூர் அணையில் பாசனத்திற்கு நீர் திறந்து வைத்தார். பின்னர் சேலத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Advertisment

தமிழக அரசின் திட்டங்களை பட்டியலிட்டு பேசிய முதல்வர், ''தமிழக அரசு வழங்கியுள்ள திட்டங்களையெல்லாம் சிலர்கள் தாங்கிக் கொள்ள முடியவில்லை. திமுகவின் செல்வாக்கை பார்த்து வயிறு எரிகிறார்கள். சில நாட்களுக்கு முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரைக்கு வந்தார். அவர் அரசியலை மட்டும் பேசிவிட்டு போயிருந்தால் இங்கு பதில் பேசியிருக்க மாட்டேன். நான் அரசியல் கூட்டத்தில் பேசி இருப்பேன். ஆனால் ஆட்சியில் குறை சொல்லி எதுவும் செய்யவில்லை; எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை; சும்மா வெறும் அறிவிப்பை மட்டும் கொடுக்கிறார்கள் என்ற ஒரு விமர்சனத்தை சொல்லிவிட்டு போயிருக்கிறார். அதனால் கட்டாயத்தின் அடிப்படையில் இன்று நான் விளக்கம் சொல்ல விரும்புகிறேன்.

nn

அமித்ஷா அவருடைய பேச்சில் தன்னுடைய ஆத்திரத்தைக் கொட்டி தீர்த்து இருக்கிறார். ஒன்றிய அரசு அறிவிக்கின்ற திட்டங்களை மடை மாற்றி மக்களுக்கான நன்மைகளை கிடைக்க விடாமல் செய்கிறது திமுக அரசு என பேசி இருக்கிறார். ஆனால் உண்மை என்ன? குடிநீர் திட்டமாக இருந்தாலும் சரி, வீடு கட்டும் திட்டமாக இருந்தாலும் சரி ஒன்றிய அரசு ஒதுக்கக்கூடிய பணத்தை வைத்து செயல்படுத்த முடியாது என்று மாநில அரசு தான் கூடுதல் பணத்தை கொடுக்கிறது. பிரதமருடைய பெயரை வைத்திருக்கக் கூடிய திட்டங்களுக்கு 50 விழுக்காட்டுக்கு மேல் மாநில அரசு நிதி ஒதுக்கி செயல்படுத்துகிறோம். நீங்கள்'படையப்பா' சினிமா பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு காட்சி வரும். 'மாப்பிள்ளை இவர்தான் ஆனால் அவர் போட்டிருக்கக் கூடிய சட்டை என்னுடையது' என டயலாக் வரும். இது போலத்தான் ஒன்றிய அரசு போடும் திட்டங்களுக்கும் நாம் நிதி கொடுத்துக் கொண்டு வருகிறோம்.

இந்தநிலையில் எந்த அடிப்படையில் நாம் மடைமாற்றம் செய்கிறோம் என அமைச்சர் குற்றம் சாட்டுகிறார். இன்னும் சொல்லப்போனால் ஒன்றிய பாஜக அரசுதான் தமிழ்நாட்டுக்கான எந்த சிறப்பு திட்டத்தையும் தராத அரசு. மிகச்சிறந்த திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியும் முழுமையாக வந்து சேர்வதில்லை. உள்துறை அமைச்சர் அப்படியே பிளேட்டை திருப்பி போடுகிறார். அமித்ஷா அவர்களே மதுரை வந்தீர்களே பத்தாண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் என்ன நிலைமையில் இருக்கிறது என்று பார்த்தீர்களா? அதே மாதிரி சுற்றி நாம் ஆட்சிக்கு வந்த இந்த நான்காண்டுகளில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்; உலக ஜல்லிக்கட்டு அரங்கம்; கீழடி அருங்காட்சியகம் என ஏராளமான பணிகளை நாங்கள் முடித்து இருக்கிறோம். இதுதான் பாஜக மாடலுக்கும் திராவிட மாடலுக்கும் உள்ள வித்தியாசம்.

Advertisment

10 ஆண்டுகளாக கட்டுவதற்கு அது என்ன மருத்துவமனையா அல்லது விண்வெளி ஆராய்ச்சி நிலையமா? ஒழுங்கா நிதி ஒதுக்கி இருந்தால் இரண்டு ஆண்டுகளில் கட்டி இருக்கலாம். இந்த லட்சணத்தில் குறை சொல்லி பேசலாமா. ஒன்றே ஒன்று கேட்கிறேன் மூன்றாவது முறையாக ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைத்திருக்கிறீங்க தமிழ்நாட்டுக்கு என்று நீங்கள் செய்த சிறப்பு திட்டத்தை சொல்லுங்க? சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும். இந்த நிலைமையை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடியவர் கேட்க திராணியில்லாமல் அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு டெல்லிக்கு தலையாட்டி பொம்மையாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர்கள் பக்கத்தில் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இப்படி தமிழுக்கும், தமிழகத்திற்கும், தமிழ்பண்பாட்டிற்கும் எதிரான அத்தனை சிந்தனைகளையும் கொண்டுள்ளார். ஆனால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்'' என்றார்.

Mettur Dam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe