தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் தற்போது கட்சிகள் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். முதல்கட்டமாக தேர்தலுக்கான விருப்ப மனுக்களை அந்தந்த கட்சிகள் தற்போது வழங்கி வருகின்றனர்.

Advertisment

udhayanithi stalin opts for mayor post

எந்நேரமும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், சென்னை தெற்கு திமுக அலுவலகத்தில் இன்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை மாநகராட்சி மேயருக்கான விருப்ப மனுக்களை, திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மா. சுப்பிரமணியன் இடமிருந்து மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி பிரபாகர்ராஜா மற்றும் அடையார் சபில் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Advertisment

இவர்கள் உடன் எஸ்.குணசேகரன், வாசுகிபாண்டியன், மா. அன்பரசன், வே.ஆனந்தம், ஏ.கே.ஆனந்த், எம். விநாயகமூர்த்தி, கோல்ட் டி.பிரகாஷ் ஆகியோர் இருந்தனர்.