Advertisment

“கையோடு எடுத்துட்டு வந்துட்டன்..” - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்..!

Udhayanithi Stalin election campaign at saathur constituency commented about AIMS

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், பிரச்சாரங்கள் அனல் பறக்க துவங்கியிருக்கின்றன. அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழகம் முழுக்க பயணித்து, தமது கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

Advertisment

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில், திமுகவின் கூட்டணிக் கட்சியான மதிமுக களம் காண்கிறது. மதிமுக சார்பில் ரகுராமன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (23.03.2021) சாத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “ஞாபகம் இருக்கா, மூனு வருஷத்துக்கு முன்னாடி அதிமுகவும் பாஜகவும் சேர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தொடங்கினாங்களே,அதைக் கையோடு எடுத்துட்டு வந்துட்டன்” என்று ஒரு செங்கல்லைத் தூக்கி, அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் காண்பித்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி இன்னும் கட்டி முடிக்காமல் அப்படியே கிடப்பில் இருப்பதை விமர்சித்து வாக்கு சேகரித்தார்.

Advertisment

tn assembly election 2021 udhayanithi stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe