udhayanithi stalin about selvam mla issue

Advertisment

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வத்தைமிட்டாய் காட்டி அழைத்துச் சென்றுள்ளனர் என தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வில் குடும்ப அரசியல் நடப்பதாக கு.க.செல்வம் குற்றஞ்சாட்டிய நிலையில், அதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "தி.மு.க.வில் உட்கட்சித் தேர்தல் நடைபெறுகிறது, ஆனால், அது அவருக்குத் தெரியவில்லை. அவர் சென்றது தி.மு.க.விற்கு இழப்பு இல்லை, தி.மு.க.வை விட்டு வெளியேற நினைப்போர் எது வேண்டுமானாலும் சொல்வார்கள். தி.மு.க.வை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை. மிட்டாயைக் காட்டி அழைத்துச்செல்வது போல அவரை அழைத்துச் சென்றுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.