நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு அதிமுக, பாஜக மீது உள்ள வெறுப்புணர்வும், திமுக பிரச்சார யுக்தியும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. இந்த தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக உதயநிதி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரது பிரச்சாரம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்ததாக திமுக நிர்வாகிகள் கூறினார்கள். இதனால் அவருக்கு கட்சியில் இளைஞரணி தலைவர் பதவி தர வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் தலைமைக்கு கோரிக்கை விடுத்தனர்.

dmk

TAG2 ---------------------------

Advertisment

Advertisment

இதனையடுத்து வெள்ளகோவில் சாமிநாதன் திமுக இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக தலைமைக்கு கடிதம் கொடுத்துள்ளார்.இதனால் வெகு விரைவில் திமுகவின் இளைஞரணி பதவிக்கு உதயநிதி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் உதயநிதியின் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது உதயநிதியின் அடுத்தப் படத்தை, பிரபல இயக்குனர் மகிழ் திருமேணி இயக்க உள்ளார். இது பற்றி விசாரித்த போது தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் தனது சினிமா ரசிகர்களுக்காக ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்று உதயநிதி முடிவெடுத்ததாக சொல்லப்படுகிறது.அதனால் தான் தனது அடுத்தப் படம் த்ரில்லர் படமாக இருக்க வேண்டும் என்பதற்காக, மகிழ் திருமேணியுடன் கைக்கோர்க்கிறார் உதயநிதி.