Advertisment

அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம்... உதயநிதி ஸ்டாலின்

கிராம சபைக் கூட்டத்தை நான் தான் கண்டு பிடிச்சேன் என்று அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம் என்று உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

சென்னை ஆா்.ஏ.புரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசுகையில், ''கடந்த 25 ஆண்டுகளாக கிராமசபை அமைப்பு உள்ளது. இத்தனை ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல் என்னைப் பார்த்து கிராமசபைக் கூட்டங்களை நடத்துகிறீா்களே?'' என்று திமுகவைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.

Advertisment

இதற்கு பதில் தரும் விதமாக முரசொலி நாளிதழில், கலைஞர் முதல் அமைச்சராக இருந்தபோதே கிராமசபை கூட்டத்தை நடத்தியிருக்கிறார் என்று கமலுக்கு கண்டனம் தெரிவித்து செய்திவெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் 2008, 2015 ஆகிய வருடங்களில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற புகைப்படங்களை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

kamalhaasan kirama saba meetings twitter udhayanithi stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe