publive-image

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளரான சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில் நடந்தது.

Advertisment

ஒவ்வொரு கூட்டத்திலும் பேசிய அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர், “எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக முழுமையாக அகற்றப்பட்டு 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். இந்தியாவின் 3-வது பெரியகட்சியாக திமுக திகழும். அதற்கான பணிகளை முதலமைச்சர் செய்து வருகிறார்”என்றனர்.

Advertisment

“சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும். அதற்கு அனைவரும் துணையாக இருக்க வேண்டும்” என்று அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.

அதேபோல், “இளைஞர்களின் இயக்கத்தின் எதிர்காலம், இளம்தலைவர், 2வது தலைவர் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஜனவரியில் புதுக்கோட்டையில் நடக்கும் பொற்கிழி வழங்கும் விழாவில் அமைச்சராக வரவேண்டும்; வருவார். அதிமுக அவர்களாகவே உடைத்துக் கொள்வார்கள்” என்று அமைச்சர் ரகுபதி பேசினார்.

Advertisment

அறந்தாங்கி வடக்கு ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதியைஅமைச்சராக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.