நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது.தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றியது.திமுக வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஸ்டாலின் பிரச்சார யுக்தியும்,பாஜக,அதிமுக கூட்டணிக்கு எதிரான மக்களின் மனநிலையே காரணம் என்று சொல்லப்படுகிறது.மேலும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி தமிழகத்தில் அனைத்து இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.இவருடைய பிரச்சாரமும்,அணுகுமுறையும் பெருவாரியான கட்சி தொண்டர்களையும்,மக்களையும் கவர்ந்ததாக சொல்லப்படுகிறது.

Advertisment

dmk

இதனால் பல்வேறு மாவட்ட செயலாளர்களும்,எம்.எல்.ஏ.க்களும்,நிர்வாகிகளும் கட்சி தலைமைக்கு கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது.அதில் இந்த தேர்தலில் கட்சிக்காக கடுமையாக உழைத்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவில் கட்சி பொறுப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.இந்த நிலையில் கட்சி மேலிடம் இதை பரிசீலனை செய்ய உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்கப்படும் என்று தெரிகிறது.