திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா.

Advertisment

udhayanidhi stalin - dmk -  Yuvaraja - Tamil Maanila Congress -

அதில், வருகின்ற 23ஆம் தேதி அன்று சென்னையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரணி நடைபெறுகிறது.அதற்கு அந்த கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளம் மூலம் இயக்கத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.

Advertisment

அந்த அழைப்பில் போராட்டத்தை கண்டு வன்முறை என்று அஞ்சும் வசதியான, வயது முதிர்ந்தவர்களை வீட்டிலேயே விட்டு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்கள். இது ஏதோ திட்டமிட்டு அமைதிப் பூங்காவாக விளங்கும் தமிழகத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இன்னும் பிற மதத்தினர் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயலாக அவரது அழைப்பு தோன்றுகிறது. இந்த வன்முறை தூண்டுகிற வகையில் நடைபெற உள்ள இந்த பேரணியை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.