திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisment

கலைஞர் நினைவிடத்தில் கலைஞரின் உதவியாளராக இருந்த நித்யானந்தம் உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் நினைவிடத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.