Advertisment

“நான் தான் அப்பவே சொன்னேனே, யாராச்சும் கேட்டிங்களா..” - சீண்டிய அமைச்சர் உதயநிதி

Udhayanidhi scolds BJP leader

Advertisment

பாஜக பிரமுகர் ஒருவர்ஒரு வருடத்திற்கு முன் சொன்ன நிகழ்வு தற்போது நிரூபணம் ஆகியுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் கட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன் பின் திமுகநிர்வாகிகளுடன்பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் பேசிய அவர், “ஒரு வருடத்திற்கு முன்பு பாஜகவை சேர்ந்தவர் ஒருவர் அவர்களுடையகட்சி நிகழ்வில், “ஸ்டாலின் கருணாநிதியை விட ஆபத்தானவர்”(Stalin is more dangerous than Karunanidhi)எனக் கூறினார். அதைத்தன்னுடைய செயலாலும்சொல்லாலும் அறிவிக்கின்ற திட்டங்களாலும் முதல்வர் நிரூபித்துக் காட்டியுள்ளார். அதற்கு நேற்று நடந்த நிகழ்வே சாட்சி.

Advertisment

அந்நிகழ்வு இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. அனைத்து முதல்வர்களும் அது குறித்து பேசி வருகிறார்கள். இன்று அதே பாஜக பிரமுகரிடம் செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு அவர், “நான் தான் ஒன்றரை வருடம் முன்னாடியே சொன்னேனே, கேட்டீர்களா?” எனக் கூறியுள்ளார். அந்த நிலைமையில் இருக்கிறது” என்றுகூறினார்.

udhayanidhistalin
இதையும் படியுங்கள்
Subscribe