Advertisment

“234 எம்.எல்.ஏ.க்களுக்கும் முன்மாதிரியாக உதயநிதி செயல்படுகிறார்” - திராவிட மாடல் பயிற்சி முகாமில் செந்தில் பாலாஜி பேச்சு 

Senthil Balaji

Advertisment

கரூரில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சிப்பாசறை சிறப்பு முகாமில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு உரையாற்றினார்.

கரூர் மாவட்டம், குளித்தலை பெரியபாலம் தனியார் மஹாலில் திமுக இளைஞர் அணி சார்பாக திராவிடமாடல்பயிற்சிப்பாசறைசிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் திருஉருவச் சிலை விரைவில் நிறுவப்படும் என்றும், மருதூர் பகுதிக்கு கதவணை திட்டம் அமைக்க முதல்வர் ரூபாய் 750 கோடி அறிவித்துள்ளார் என்றும், தமிழகத்தில் உள்ள 234 எம்எல்ஏக்களுக்கும் முன்மாதிரியாக செயல்படும் வகையில் உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என்றும், தொடர்ந்து குளித்தலை பகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்குவார் என்றும் கூறினார். இந்த முகாமில் எம்.எல்.ஏ. இரா மாணிக்கம், வழக்கறிஞர் சிவகாமசுந்தரி மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர் அணியினர், ஒன்றியச் செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe