Skip to main content

“234 எம்.எல்.ஏ.க்களுக்கும் முன்மாதிரியாக உதயநிதி செயல்படுகிறார்” - திராவிட மாடல் பயிற்சி முகாமில் செந்தில் பாலாஜி பேச்சு 

Published on 11/09/2022 | Edited on 11/09/2022

 

Senthil Balaji

 

கரூரில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சிப்பாசறை சிறப்பு முகாமில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு உரையாற்றினார்.

 

கரூர் மாவட்டம், குளித்தலை பெரியபாலம் தனியார் மஹாலில் திமுக இளைஞர் அணி சார்பாக திராவிடமாடல் பயிற்சிப்பாசறை சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.

 

அவர் பேசுகையில் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் திருஉருவச் சிலை விரைவில் நிறுவப்படும் என்றும், மருதூர் பகுதிக்கு கதவணை திட்டம் அமைக்க முதல்வர் ரூபாய் 750 கோடி அறிவித்துள்ளார் என்றும், தமிழகத்தில் உள்ள 234 எம்எல்ஏக்களுக்கும் முன்மாதிரியாக செயல்படும் வகையில் உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என்றும், தொடர்ந்து குளித்தலை பகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்குவார் என்றும் கூறினார். இந்த முகாமில் எம்.எல்.ஏ. இரா மாணிக்கம்,  வழக்கறிஞர் சிவகாமசுந்தரி மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர் அணியினர், ஒன்றியச் செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
Senthil Balaji's bail plea dismissed again

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மீண்டும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த வருடம் ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர்ந்து வருகிறார். தொடர்ந்து 15 முறை அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டுமுறை செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது முறையாக இன்று மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதால், அவரை ஜாமீனில் வெளியே விட்டால் சாட்சிகளை அழிக்க வாய்ப்புள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் வாதங்கள் வைக்கப்பட்ட நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Next Story

'அமைச்சர்கள் வீட்டில் பெட்டி பெட்டியா கட்டி கட்டியா எடுத்தது யாருடைய வரிப்பணம்'-உதயநிதிக்கு தமிழிசை கேள்வி

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
'Whose tax money was taken in boxes and boxes in the house of ministers'- Tamilisai question to Udhayanidhi

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் சீர் செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசிடம் மாநில அரசு நிவாரணம் கோரியிருந்தது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி,' நான் என்ன அவங்க வீட்டு அப்பன் காசையா கேட்கிறோம். மக்கள் கொடுத்த வரி பணத்தை தானே கேட்கிறோம்' என பேசி இருந்தார்.

இந்த பேச்சுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் இதற்கு பதிலளித்து பேசுகையில், ''அவருடைய தாத்தா திட்டுவதென்றால் கூட அழகு தமிழில் திட்டுவார். நீங்கள் கலைஞர் உரிமைத் தொகை கொடுக்கும் பொழுது நாங்கள் கேட்கலாம் அல்லவா? இது என்ன உங்கள் வீட்டு காசா என்று கேட்கலாமா? பிரதமர் வீடு கட்டும் திட்டம் என்று ஆரம்பித்தார்கள். அதற்கு பிரதமரா காசு கொடுக்கிறார்கள் என்று கேட்டார்கள்.

அப்ப கலைஞர் உரிமைத்தொகை என்றால் கலைஞர் வீட்டில் இருந்தா எடுத்துக் கொடுக்கிறார்கள். இந்த மாதிரி வார்த்தைகளை முதலில் அடக்கவில்லை என்றால் உதயநிதியை ஒரு எதிர்மறை தலைவராக தான் இந்தியா கூட்டணியும், திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர்கொள்ளப் போகிறது'' என்றார். இதற்கு பதில் கொடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'தெலுங்கானா ஆளுநரா அவரை தமிழ்நாட்டில் வந்து சொல்ல சொல்லுங்க இதெல்லாம்' என்ன பதில் கொடுத்திருந்தார்.

'Whose tax money was taken in boxes and boxes in the house of ministers'- Tamilisai question to Udhayanidhi

இந்நிலையில் தற்காப்பு கலை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் உதயநிதியின் பதில் குறித்த கேள்விகளை முன் வைத்தனர். அதற்கு பதிலளித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், 'தம்பி, மரியாதைக்குரிய மாநில அமைச்சர் உதயநிதி மக்கள் வரிப்பணத்தை பற்றி பேசுகிறார். நான் ஒரே ஒரு கேள்வியை கேட்டுக்கொள்கிறேன். தமிழக மக்களின் வரிப்பணத்தை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். நீங்கள் இன்று இலாகா இல்லாத ஒரு மந்திரியை வைத்திருக்கிறீர்கள். மக்கள் வரிப்பணத்தை பற்றி இவ்வளவு கவலைப்படுகிறீர்கள். எந்த வரிப்பணத்தில் நீங்கள் இலாகா இல்லாத மந்திரியை வைத்திருக்கிறீர்கள். தமிழகத்தில் உள்ள பல அமைச்சர்கள் வீட்டில் பெட்டி பெட்டியா கட்டி கட்டியா எடுத்தார்கள். அது யாருடைய வரிப்பணம். மக்களுக்கான பணமா? அல்லது உங்களுக்கான பணமா? இதற்கெல்லாம் பதில் சொல்லுங்கள். 

நிதி அந்தந்த நேரத்தில், தகுதி வாய்ந்த நேரத்தில் கொடுக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு குரல் கொடுப்பதற்கு நானும் தயாராக இருக்கிறேன். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் ஏதோ பாராபட்சமாக நடந்து கொள்வதைப் போல் தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு நீங்கள் சொல்கிறீர்கள். அப்பா வீடு என்று கேட்டால் அது பரவாயில்லை அப்பன் வீடு என்று சொன்னால் கலோக்கியலாக சொல்லலாம். ஆனால் கேட்ட முறை தவறாக எனக்கு தோன்றியது. அதற்கு நான் பதில் சொன்னேன் என்பது என்னுடைய கருத்து'' என்றார்.