Advertisment

தமிழகத்தில் நடந்த முடிந்த தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார். அதனைத் தொடர்ந்து அவர் தொகுதி முழுவதும் மக்களிடம் நேரடியாகச் சென்று அங்குள்ள நிறைகுறைகளைக் கேட்டறிந்துவருகிறார். அந்தவகையில், டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள கரோனா கட்டளை மையத்தை திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் இன்று (15.05.2021) ஆய்வு நடத்தினர்.