Advertisment

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும்! - ஐ.பெரியசாமி கூட்டத்திலும் தீர்மானம்! 

Udayanidhi Stalin  should make a minister! - Resolution at the I. Periyasamy meeting

திண்டுக்கல் திமுக கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தின் சார்பாக திண்டுக்கல் கலைஞர் அரங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

Advertisment

இந்தக் கூட்டத்தில் உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் வருகின்ற ஜூன் 3ம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞரின் 99வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக மாவட்டம் முழுவதும் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடுவதுடன் மட்டுமல்லாமல் இத்தொகுதியில் உள்ள அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

அதோடு திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் எனவும் திண்டுக்கல் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, திண்டுக்கல் மேயர் இளமதி, மாநகரத்தின் அமையராஜப்பா, மாவட்டத் துணைச் செயலாளர்கள் நாகராஜ் தண்டபாணி, வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe