Advertisment

தயாநிதி அழகிரியை கட்டித்தழுவி வரவேற்ற உதயநிதி ஸ்டாலின்..! (படங்கள்) 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (07/05/2021) காலை 09.00 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து, அவரது தலைமையிலான அமைச்சரவை அமைச்சர்களும் பதவியேற்றனர்.

Advertisment

முன்னதாக, மு.க. ஸ்டாலினுக்கு அவரது சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், "தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள எனது தம்பி மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார். முதலமைச்சராக நாளை என் தம்பி மு.க. ஸ்டாலின் பதவியேற்பதில் பெருமைப்படுகிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.இவரது இந்த வாழ்த்துச்செய்தி திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியிலும் வெளியிட்டப்பட்டிருக்கிறது.

Advertisment

இதனைத் தொடர்ந்து அவருக்கு திமுக தரப்பிலிருந்து பதவியேற்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், காரோனா தொற்று பரவல் காரணமாக அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது எனவும், தனது மகன் தயாநிதி அழகிரி, மகள் கயல்விழி ஆகியோர் பங்கேற்பார்கள் எனத் தெரிவித்திருந்தார். அதேபோல், இன்று முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில், அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி வருகை தந்தார். உதயநிதி ஸ்டாலின்தயாநிதி அழகிரியை கட்டித்தழுவி வரவேற்றார். மேலும், இந்நிகழ்ச்சியில்மு.க. முத்து, அவரது குடும்பத்தார், சபரீசன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து, அவரது மகன் மதன் கார்க்கி ஆகியோரும் பங்கேற்றனர்.

udhayanithi stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe