Udayanidhi Stalin answered about Deputy Chief Minister position

திமுக இளைஞரணியின் 45ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “துணை முதல்வர் பதவி உயர்வு குறித்துப் பல செய்திகள் வருகின்றன. எங்கள் அரசில் உள்ள அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருப்பார்கள் என்று நான் முன்பே பத்திரிகையாளர்களிடம் கூறியிருக்கிறேன். திமுக ஆட்சியில் உள்ள அனைத்து அமைச்சர்களும் முதல்வரின் துணையாகத் தான் பணியாற்றி வருகின்றனர்.

எந்தப் பதவியாக இருந்தாலும், என்னைப் பொருத்தவரை இளைஞர் அணிச் செயலாளர் பதவிதான் எனக்குப் பிடித்தது. கடந்த தேர்தல்களைப் போல் 2026 தேர்தல்தான் நமது இலக்கு. எந்தக் கூட்டணி வந்தாலும் நமது தலைவர் தான் வெற்றி பெறுவார். மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பார் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின். 2026 சட்டமன்றத் தேர்தலில் நமது திமுக கூட்டணிதான் வெற்றிபெறப் போகிறது. தினமும் காலையிலும் மாலையிலும் குறைந்தது பத்து நிமிடங்களாவது சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.