தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 99வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரசாத்தை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில் அருகே இருந்து இருசக்கர வாகன பிரச்சாரம் செய்தார்.

Advertisment