nainar nagendran vaikundarajan

Advertisment

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆளுநராக பதவியேற்ற அவர் தமிழகத்திற்கு வந்து பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். ஆனால் இதுவரை அவர் வகித்த பதவிக்கு யாரையும் பாஜக மேலிடம் நியமிக்கவில்லை. பலபேர் அந்தப் பதவிக்கு போட்டியிட்டும் யாரையும் இதுவரை பாஜக மேலிடம் செலக்ட் பண்ணவில்லை.

பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா உள்பட மேலிடத்தில் 3 முறை ஆலோசனை நடத்தியும் தமிழ்நாட்டில் பொருத்தமான ஆள் கிடைக்கலையாம். பதவி கேட்டு யாரும் டெல்லிக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். இருந்தும் பலரும் பதவிக்கு முண்டியடிக்கிறார்கள். இதில் நயினார் நாகேந்திரனுக்கு அந்தப் பதவியை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் டெல்லி வரை லாபி செய்திருக்கிறார். இதை கவனித்த பா.ஜ.க. தலைமை, வைகுண்டராஜனுக்கும் நயினாருக்கும் என்ன தொடர்பு? பிசினஸ் கூட்டாளிகளா, முறைகேடுகளில் தொடர்பான்னு தோண்டித் துருவ ஆரம்பிச்சிருக்காம்.