புதுவை அரசு கவிழ்க்கப்பட்ட பிறகு, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் நடந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரையில், புதுவையின் துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை செளந்திரராஜன் கட்டுப்பாட்டில் புதுவை அரசு நிர்வாகம் இருக்கும்.
இந்த நிலையில், தமிழிசைக்கு நிர்வாகத்தில் உதவி செய்வதற்காக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரமெளலி மற்றும் சி.ஆர்.பி.எஃப்.பின் டைரக்ட் ஜெனரலாக இருக்கும் மகேஷ்வரி ஐ.பி.எஸ். ஆகிய இருவரையும் தமிழிசையின் ஆலோசகராக நியமித்திருக்கிறது மத்திய அரசு.