எடப்பாடியின் திட்டம்; காலியாகும் அண்ணாமலையின் கூடாரம்

Two more executives left the BJP and joined the AIADMK

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே கட்சியில் சீனியர்கள் ஓரம் கட்டப்படுவதாகவும், கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அனைத்திலும் தன்னையே அண்ணாமலை முன்னிறுத்தி கொள்வதாகவும் சமீபகாலமாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் காயத்ரி ரகுராம் அண்ணாமலை தலைமையிலான பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறிகட்சியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இவரைத் தொடர்ந்து ஐ.டி. விங்செயலாளர் திலிப் கண்ணனும், ஓ.பி.சி மாநிலச் செயலாளர் ஜோதியும் பாஜகவில் இருந்து விலகி எடப்பாடிமுன்னிலையில் இன்று தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவடைந்த நிலையில் மூன்று முக்கிய் பொறுப்பாளர்களும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்திருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், பாஜகவில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையிலேயே அதிமுகவில் அடுத்தடுத்து இணைந்து வருவது, தமிழக பாஜகவினை வலுவிழக்கச் செய்யும் செயலைஇ.பி.எஸ் முன்னெடுத்து வருகிறாரோ என எண்ணத்தோன்றுகிறது. அதற்கேற்றது போலவே அமர்பிரசாத் ரெட்டி, “நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கட்சி மாறிய கொள்கையற்ற பிழைப்புவாதிகளை வைத்து அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?” என எடப்பாடியை கடுமையாகச்சாடியிருப்பதும் கவனிக்கப்படத்தக்கது.

Annamalai
இதையும் படியுங்கள்
Subscribe