Advertisment

த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் கைது!

T.V.K. General Secretary Anand arrested!

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசாரின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த நிலையில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அண்ணாநகர் துணை ஆணையர் சினேக பிரியா, ஆவடி துணை ஆணையர் இமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா அடங்கிய சிறப்புப் புலனாய்வு குழுவை அமைத்துள்ளது.

Advertisment

இத்தகைய சூழலில் தான் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டு சொல்லொனா வேதனைக்கு ஆளாவதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்திருந்தார். இது குறித்து விஜய் அவரது கைப்பட எழுதிய கடிதத்தில், ‘அன்புத் தங்கைகளே! கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழத்தில் தாய்மார்கள் என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்பும் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொனா வேதனைக்கும் ஆளாகிறேன். யாரிடம் உங்கள் பாதுகாப்பைம் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்கள எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது நெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம்.. எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்போன் அண்ணனாகவும், அரணாகவும். எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இதனையடுத்து தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் விஜய் எழுதிய கடிதத்தை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். அப்போது போலீசார் விஜய் எழுதிய கடிதத்தை பொது மக்களுக்கு விநியோகிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதனையும் மீறி இந்த கடிதத்தைக் கொண்டார்கள் விநியோகித்திருந்து நிலையில் அவர்களை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தொண்டர்களைப் பார்ப்பதற்காகச் சென்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்தை கைது செய்து தி.நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து மண்டபத்திற்குள் த.வெ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக அக்கட்சியின் தலைவர் விஜய், ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று (30.12.2024) சந்தித்துப் பேசினார். அப்போது அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், சட்டம் - ஒழுங்கு தொடர்பாகவும் ஆளுநரிடம் விஜய் மனு அளித்ததாகத் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Chennai police arrested anand
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe