Advertisment

“அதிமுகவிற்கான திருப்பு முனை; அகில இந்திய அளவில் திரும்பிப் பார்க்கும்படி இருக்கும்” - எடப்பாடி பழனிசாமி

“Turnaround for AIADMK; Edappadi Palaniswami said,

சென்னை வியாசர்பாடியில் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி 5 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி இளங்கோவன் குடும்பத்தினரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.

Advertisment

பின்னர்,எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மதுரை மாநாடு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு நிச்சயம் திருப்பு முனையாக அமையும். அதிமுக மாநில மாநாடு 20/8/2023 அன்று மதுரையில் பிரம்மாண்டமானமுறையில் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களும் மதுரையை திரும்பிப் பார்க்கும் படியாக அந்த மாநாடு அமையும். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும். புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்.

Advertisment

சின்னம் நாங்கள் கேட்டுள்ளோம். அதற்காக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டெல்லி நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு குறிப்பிட்ட கால அளவை நிர்ணயித்துள்ளார்கள். அதற்குள் எங்களுக்கு சின்னம் கிடைக்கப்பெற்றால் கர்நாடகத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும்” எனக் கூறினார்.

admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe