Advertisment

இலங்கையிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய துருக்கியர் கைது!

துருக்கி நாட்டைச் சேர்ந்த தேவூரின் மலேசியாவிலிருந்து கடந்த மாதம் 27 ந் தேதி பாஸ்போர்ட் மூலம் இலங்கை சென்றுள்ளார். பின் அங்கு பல இடங்களை சுற்றி பார்த்த இவரைகடந்த 4 தினங்களுக்கு முன் யாழ்பாணத்திற்கு வந்து பல பகுதிகளுக்கு சென்று விட்டு இன்று பிற்பகல் 1 மணியளவில் யாழ்பாணத்திலிருந்து பைபர் படகில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு பேர் ராமேஸ்வரம் சேரங்கோட்டை அருகிலுள்ள துறைமுகப்பகுதியில் தேவூரினை இந்திய கடற்படைமுகாம் அருகே வந்து இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

Advertisment

us

இவ்வேளையில், பைபர் படகு வந்து செல்வதை அப்பகுதி மீனவர்கள் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் தந்ததையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த துறைமுக போலீசார் மற்றும் மெரைன் போலீசார் தேவூரினை கைது செய்து அவரிடம் இருந்த பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், இலங்கை ரூபாய் 25 ஆயிரம் கொடுத்து படகில் தமிழகத்திற்கு வந்துள்ளது தெரிய வந்துவுள்ளது. மேலும் இலங்கைக்கு சுற்றுலா சென்றவர் ஏதேனும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டவராஅல்லது இலங்கையில்ஏதேனும் பிரச்சனையில் சிக்கி அதிலிருந்து தப்பிக்க படகில் இந்தியாவிற்கு தப்பி வந்துள்ளாராஎன்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரம் கடல் பகுதிகளில் சமூகவிரோத செயல்கள் அதிகமாக நடைப்பெற்று வரும் நிலையில் இன்று மாலை 7 மணியளவில் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் இந்திய கடற்படைமுகாம் அருகே இலங்கை படகில் வந்து கரையில் இறங்கிவிட்டு சென்று இருப்பது சர்வதேச கடல் எல்லையில் பாதுகாப்பை கேள்வி குறியாக்கியுள்ளது.

arrested Sri Lanka Turkish
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe