சசிகலாவை வெறுப்பேற்றிய தினகரன்! கடும் அப்செட்டில் சசிகலா!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா, பரணி கார்த்திகேயன் மட்டும் சிலர் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறியது தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் கட்சியை பலப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமமுக சார்பாக நடத்தப்பட்டது. மேலும் கட்சியை பதிவு செய்த பின்னரே தேர்தலில் போட்டியிடுவது என்று தினகரன் தெரிவித்து இருந்தார். இதனால் வரவிருக்கும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தினகரன் கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ammk

சமீபத்தில் தினகரன் கட்சியில் அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். இதனால் சசிகலா தரப்பு அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் வெளிநாடு சென்று இருக்கும் எடப்பாடி சசிகலாவிடம் தகவல் கொடுத்து விட்டு தான் சென்றார் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்ட்டது. இதனால் மீண்டும் சசிகலாவை அதிமுகவிற்கு தலைமை பொறுப்பை கொடுக்கும் வகையில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்கான சில அரசியல் காய்கள் நகர்த்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தினகரன் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பதால் அதிமுகவில் சசிகலா இணைவதற்கு இடையூறாக இருக்கும் என்று சசிகலா இருப்பதாக கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல் தினகரன் கட்சியில் இருந்து தினமும் நிர்வாகிகள் வெளியேறுவதால் இருப்பவர்களுக்கு பதவி கொடுத்து தக்க வைக்கலாம் என்று தினகரன் தரப்பு முடிவெடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

admk ammk politics sasikala
இதையும் படியுங்கள்
Subscribe