தருமபுரி அமமுகவினரால் தினகரனுக்கு அடுத்த அதிர்ச்சி!

சமீப காலமாக தினகரன், தங்க தமிழ்செல்வனின் மோதல் போக்கு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினகரனை தங்க தமிழ்ச்செல்வன் திட்டுவது போல ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து இனிமேல் தினகரனின் அமமுக கட்சியில் இருக்கப்போவதில்லை என்று அறிவித்தார். மேலும் நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை தங்க தமிழ்ச்செல்வன் சந்தித்து திமுகவில் இணைந்து கொண்டார்.

admk

இதனால் தினகரன் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அமமுகவினர் 80 பேர் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். மேலும் தினகரன் கட்சியின் செய்தி தொடர்பாளர் சசிரேகா மற்றும் வடசென்னையை சேர்ந்த அமமுகவினர் பலர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர் என்பது குறிப்படத்தக்கது.

admk ammk dharmapuri eps ops
இதையும் படியுங்கள்
Subscribe