நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா மற்றும் சிலர் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறியது தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் செந்தில்பாலாஜியும், தங்க தமிழ்ச்செல்வனும் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Advertisment

ammk

அதே போல் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான கலைச்செல்வன், பிரபு, ரத்தினசபாபதி ஆகியோரும் அதிமுகவில் இணைந்தனர். நடிகரும், அரசியல்வாதியுமான ரஞ்சித் பாமகவில் இருந்து வெளியேறி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகக் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் நடிகர் ரஞ்சித் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் இணையபோகிறார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் நடிகர் ரஞ்சித்திடம் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் வரவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தினகரன் கட்சியில் இருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து வெளியேறி வருவதால் தினகரன் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.