நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படு தோல்வியை சந்தித்தது. இதனால் அமமுக கட்சியில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் விலகி திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் தினகரனின் நம்பிக்கையாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இது தினகரனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் அமமுக கட்சிக்கு அலுவலகம் கொடுத்த அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஈசாக்கி சுப்பையாவும் விலகுவதாக அறிவித்தார். இதனால் தினகரன் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வுகளுக்கு பிறகு நேற்று அமமுக கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் J. இஷிகா, தினகரன் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் இணைந்து கொண்டார். தொடர்ந்து அமமுகவில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர் என்பது அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Follow Us