நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. அதிமுக உட்பட மற்ற அனைத்து கட்சிகளும் படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் தினகரன் கட்சி ஒரு மாற்று சக்தியாக வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் படுதோல்வி அடைந்தது. தேர்தலில் அ.ம.மு.க.வின் படுதோல்வியால் படு அப்செட்டில் மனசொடிஞ்சி போயிருக்கார் தினகரன். இதனால் கட்சி நிர்வாகி கள்ட்ட கூட அவர் முன்ன மாதிரி கலகலப்பா பேசறது இல்லை.

ttv

Advertisment

Advertisment

அதனால் அவர் வீட்டுக்கு வரும் தொண்டர்களின் எண்ணிக்கையும் ரொம்பவே குறைஞ்சிடிச்சி. இப்படி தினகரன் தன்னையே சுருக்கிக்கிட்டு அமைதியா இருக்கும் நேரத்தில், தேர்தல் செலவுக்காக கொடுத்த பணத்துக் கெல்லாம் உடனே கணக்கு கொடுன்னு, கடிதம் அனுப்பியிருக் காராம் சசிகலா. இது ஏற்கனவே நொந்து போய்க் கிடக்கும் தினகரனை, மேலும் நோகடிச்சிருக்குது. தினமும் தினகரனின் அமமுக கட்சி தொண்டர்கள் அதிமுக மற்றும் திமுகவில் இணைவதால் கட்சி மேலும் வலுவிழந்து காணப்படுகிறது.