Advertisment

“உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதற்கு ஏதோ ஒரு அவசரம் இருக்கிறது” - டிடிவி  தினகரன் 

ttv dinakaran talks about udhayanidhi stalin minister 

திமுகவின் இளைஞரணிசெயலாளரும்சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றஉறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினைஅமைச்சரவையில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பரிந்துரை கடிதத்தை ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்றுக்கொண்ட நிலையில் உதயநிதிஸ்டாலின் நாளை காலை 09.30 மணி அளவில்அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

Advertisment

இதுகுறித்து அமமுகதலைவர் டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "உதயநிதி ஸ்டாலின் திமுகவில் சட்டமன்ற உறுப்பினராகஉள்ளதால் அவர் அமைச்சர்ஆகிறார். இதில் ஒன்றும் தவறில்லை. 89இல்திமுக ஆட்சிக்கு வந்தபோது ஸ்டாலின் அமைச்சர் ஆனார். ஆனால் இதில் ஏதோ ஒரு அவசரம் ஸ்டாலினுக்கு இருக்கிறது எனத்தெரிகிறது. அதற்குஎன்ன காரணம்என்பதைக் காலம்தான் உணர்த்தும்" என்றார்.

Advertisment

முதல்வர் ஸ்டாலின்புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி அமையும் என்று பேசியது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "தேர்தல் வாக்குறுதிகள்எல்லாம் சொல்லிட்டு ஏமாற்றுவதுதான் திராவிட மாடல் ஆட்சி. பாண்டிச்சேரி மக்கள் தமிழகத்தில் நடந்து வருவதைக் கவனித்து வருகின்றனர். பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்குஎதிரான நிலைப்பாட்டைமக்கள்எடுப்பார்கள்"என்றார்.

udhayanidhistalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe