நேற்று தனியார் தொலைக்காட்சியில் தினகரனின் அமமுக கட்சியை சேர்ந்த தங்கதமிழ்செல்வன் அதிமுகவில் இணையப் போவதாக தகவல் வெளியானது. இதற்கு தங்கதமிழ்செல்வன் மறுப்பு தெரிவித்து நான் எந்த கட்சியிலும் தற்போது இணையவில்லை என்று கூறினார்.

ttv

Advertisment

இந்த பற்றி அமைச்சர் ஜெயக்குமார்கூறும் போது, அதிமுகவில் தினகரன், சசிகலாவை தவிர வேறு யார் வந்தாலும் வரவேற்போம் என்று கூறினார் . இந்நிலையில் திருச்சியில் தினகரன் பேட்டி அளித்த போது, எங்களை லெட்டர்பேடு கட்சி என்று விமர்சிப்பவர்கள், எங்களது கட்சியினரை பொய் சொல்லி, ஏமாற்றி அவர்களது கட்சியில் இணைக்கின்றனர், அவர்களை நம்பி எங்கள் கட்சியில் இருந்து சென்றவர்கள் மீண்டும் எங்களது கட்சிக்கு வந்து விடுகின்றனர் என்று கூறினார்.